×

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி தடை செய்யப்பட்ட 13 டன் உப்பு மூட்டைகள் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் தடை செய்யப்பட்ட 13 டன் அயோடின் கலக்காத 530 உப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேடு உணவுதானிய பல்பொருள் அங்காடி மொத்த விற்பனை மையத்தில் தடை செய்யப்பட்ட அயோடின் கலக்காத உப்பு விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று மாலை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, ராமராஜ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 530 உப்புமூட்டைகள் சமையலுக்கு பயன்படுத்த முடியாத அயோடின் கலக்காத உப்பு என்பது தெரியவந்தது. விற்பனை மைய உரிமையாளர் இது சமையலுக்கு பயன்படுத்துவது இல்லை, மாறாக மின்சார எர்த் போட பயன்படுத்தப்படும் உப்பு என கூறினார். இதனை ஏற்காத உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உரிய விளக்கம் அளிக்கும் வரை குடோனுக்கு சீல் வைத்து, உப்பு மூட்டைகளை பறிமுதல் செய்கிறோம் என்றனர். இதை தொடர்ந்து 13 டன் உப்பை பறிமுதல் செய்தனர்….

The post உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி தடை செய்யப்பட்ட 13 டன் உப்பு மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Food Security Department ,Coimbade Food Grain Shopping Campus ,Security ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!